அம்பாசமுத்திரத்தில் அதிகரிக்கும் நோய் தொற்று
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சியில் 6 பேருக்கு தொற்று
அம்பாசமுத்திரத்தில் அவசரமாக கடைகள் மூடப்பட்டன.
அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
அம்பாசமுத்திரம் வனத்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் , தாசில்தார் கல்லிடைக்குறிச்சி மேல்முக நாடார் தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர், அதே பகுதி கார்த்திகை மடம் தெரு, மன்னார்கோயில் வெயிலான் தெரு ,கிராம செவிலியர் உள்ளிட்ட 8 பேருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து அதிகாரிகள் தனிமை படுத்தப்பட்டனர் மற்ற அனைவரும் 108 ஆம்புலன்சில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அம்பாசமுத்திரம் தாசில்தாருக்கு தொற்று உறுதியானதையடுத்து நகரின் பிரதான சாலையில் அமைந்துள்ள தாலுகா அலுவலகம், புலிகள் காப்பகம் துணை இயக்குனர் அலுவலகம் நகராட்சி வாகனம் மூலம் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அலுவலகங்கள் 3 நாட்கள் இயங்காது என நகராட்சி நிர்வாகத்தால் அறிவிப்பு விடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவலையடுத்து மாவட்ட ஆட்சியர் அவசர உத்தரவு படி அம்பாசமுத்திரம் நகரின் பிரதான சாலையில் இயங்கி வந்த கடைகள் அனைத்தையும் மூட காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
இதையடுத்து அரசு மதுபான கடை, ஒரு சில உணவகம் மற்றும் மருந்தகம் கடைகள் தவிர அனைத்து வணிக வளாகங்களும் அவசர அவசரமாக மூடப்பட்டன.
செய்தி:- நெல்லை ஸ்ரீ
9600510180