நீலகிரி மாவட்ட பா.ஜா கா சார்பில் 400 பேருக்கு காய்கறி வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம்:ஊட்டி காந்தள் குருசடி காலனி பகுதியில், பா.ஜ., இளைஞர் அணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சார்பாக, பொதுமக்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.ஊட்டி காந்தள் பகுதியில், 'சீல்' வைக்கப்பட்ட இடங்களில், கிருமிநாசினி தெளித்து துாய்மை படுத்தும் பணிகளும், மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதை தவிர, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் நாள்தோறும் ஆங்காங்கே வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், ஊட்டி காந்தள் குருசடி காலனி பகுதியில், பா.ஜ., இளைஞர் அணி மற்றும்ஆர்.எஸ்.எஸ்., சார்பாக, பொதுமக்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது. அதில், 400 பேர் பயன்பெற்றனர். ஏற்பாடுகளை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நீலகிரி மாவட்ட தின ஓசை செய்தியாளர் ஆர் சூரஜ் 8508063861.,