தலமையாசிரியர்களுக்கு TNHHSSGTA னுடைய கனிவான வேண்டுகோள்.
ஆசிரியர்கள் மாணவர்களை கொரோனா தொற்றுநோயிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்ததின் அடிப்படையில் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கொடுத்த ஆலோசனையின் பேரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது. தேர்ச்சி வழங்குவதற்க்கான தெளிவுரைகள் இன்னும் தேர்வுதுறையிடமிருந்து வராத சூழலில் result பணிக்காக தலமையாசிரியர்கள் ஆசிரியர்களை பள்ளிக்கு வரசொல்லி வற்புறுத்துவது வேதனை அளிக்கிறது.
மாணவர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி ஆசிரியர்கள் கடமையோ அதே போன்று ஆசிரியர்களை பாதுகாப்பது தலைமையாசிரியர்களின் கடமை. ஆசிரியர்களை வற்புறுத்தி பள்ளிக்கு வரசொல்லி அவர்களுக்கு ஏதாவது நோய் தொற்று ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பும் தலமையாசிரியர்களையே சாரும். எந்த ஒரு பணிநிமித்தமாகவும் ஆசிரியர்களை பள்ளிக்கு வரசொல்லி பள்ளி கல்வி துறையிடமிருந்தோ மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்தோ எந்த உத்தரவும் வராத சூழலில் கொரோனா தொற்று அதிகமாகிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களை பள்ளிக்கு வரசொல்லி வற்புறுத்துவது ஏற்புடையதல்ல. ஆசிரியர்களை பள்ளிக்கு வரசொல்லி வற்புறுத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கேட்டுக்கொள்கிறது
செய்தியாளர். துரை. ஏழுமலை.,