விதிகளை மீறி புறம்போக்கு நிலத்தில் மின் இணைப்பு.
செங்கல்பட்டு மின் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு விதியை மீறி போலி ஆவணங்கள் மூலம் புறம்போக்கு இடத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
புறம்போக்கு மற்றும் அரசு நிலங்களில், மின் இணைப்பு வழங்குவதற்கு, தாசில்தாரின் தடையில்லா சான்று கட்டாயம் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது. புதிய மின் இணைப்பு பெற, விண்ணப்பத்துடன், சொத்து வரி ரசீது, குடிநீர் வரி ரசீது, விற்பனை பத்திரம் என, ஏதேனும் ஒன்று இணைக்க வேண்டும். சிலர், புறம்போக்கு நிலம், நீர் நிலைகளை ஆக்கிரமித்து, கட்டுமானங்கள் கட்டி வருகின்றனர். அவற்றுக்கு, மின் வாரிய விதிப்படி, மின் இணைப்பு வழங்க கூடாது. இருப்பினும், சிலர் விதிகளை மீறி, மின் இணைப்பு வழங்குவதாக, புகார் எழுந்துள்ளது.இதையடுத்து, புறம்போக்கு மற்றும் அரசு நிலங்களில், மின் இணைப்பு வழங்குவதற்கு, தாசில்தாரின் தடையில்லா சான்று அவசியம் என்று, மின் வாரியம் தெரிவித்து உள்ளது.
ஆனால் செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளில் வருவாய் துறை மூலம்
போலியாக பட்டா மற்றும் புறம்போக்கு நிலத்தில் போலி தடையில்லா சான்று போன்றவற்றின் மூலம் மின் இணைப்புகள் பெறப்பட்டு வருகிறது. ஆவணங்கள் அனைத்தும் போலி என தெரிந்தும் மின் அதிகாரிகள் கணிசமான தொகை பெற்றுக்கொண்டு மின் இணைப்பு வழங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக செங்கல்பட்டு ஊரகம் நிமிலி பாலூர் பொன் விளைந்த களத்தூர் மாம்பாக்கம் வண்டலூர் கூடுவாஞ்சேரி காயரம்பேடு சிங்கப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் போலி ஆவணங்கள் மூலம் மின் பெறப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செங்கல்பட்டு மின்பகிர்மான வட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இது தொடர்பாக கேட்டபோது:
உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப் படுகிறது.
இதுகுறித்து செங்கல்பட்டு மின்பகிர்மான வட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இது தொடர்பாக கேட்டபோது:
உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் ஆவணங்களில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் உண்மை தன்மையை கேட்டறிந்து பிறகு இணைப்பு வழங்கப்படுகிறது.
போலியான ஆவணங்களைக் கொண்டு மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக உரிய ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு தவறு நடந்து இருக்கும் பட்சத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.