தற்கொலைக்கு முயன்ற லாரி டிரைவர் பலி
நீலகிரி மாவட்டம் கூடலுார், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் தியாகராஜன்,56. கடந்த 30ம் தேதி, செம்பாலா அருகே, இவர் ஓட்டி வந்த லாரி, நடந்து சென்ற சிலர் மீது மோதுவதை போல வந்துள்ளது. நடந்து சென்றவர்கள், நர்த்தகி பகுதியில், லாரியை நிறுத்தி, அவரை பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர். மணிதுரை அவரிடம் விசாரணை, செய்து, வாகனத்தின் ஆவணங்களை கேட்டுள்ளார். ஆவணங்களை எடுக்க சென்றவர், லாரியில் ஏறி, எரிபொருளை உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனிடையே, 'காவல் அதிகாரி திட்டியதால், அவர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார்,' என, புகார் தெரிவிக்கப்பட்டது.இதனை மறுத்த காவல்துறை,'குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த அவரிடம், போலீசார் விசாரணை நடத்தி, வாகனத்தின் ஆவணங்களை மட்டுமே கேட்டுள்ளனர். அவரை திட்டவில்லை,' என்றனர்.இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி நேற்று தியாகராஜன் உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம் தின ஓசை செய்தியாளர் ஆர் கேசவமூர்த்தி.,